தகவல் முறைமை Grade 11

Information System Development தகவல் முறைமை விருத்தி செய்முறை

முறைமை (System)

ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக பல்வேறு உட்செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படல் முறைமை எனப்படும்.

இங்கு உட்செயற்பாடுகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக தொழிற்படும் போது ஒன்றுடனொன்று சேர்ந்திருக்கும். ஆனால், அவை சுயாதீனமான தொழிற்பாட்டைக் கொன்டவை. இதனால் ஒவ்வொரு கூறும் தனித்தனி முறைமையாகக் கருதப்படுகின்றன. இவை பொதுவாக உபமுறைமை எனவும் அழைக்கப்படுகின்றது.

ஒரு முறைமைக்கு பின்வருவனவற்றை உதாரணம் ஆக கொள்ளலாம்.

மனித உடல், பாடசாலை, கார், கணனி, சுற்றாடல்….

ஒரு முறைமை பின்வரும் கூறுகளை உள்ளடக்கியிருக்குகின்றன.

1. உள்ளீடு (Input)

2. வெளியீடு (Output) )

3. செயன்முறை (Process)

இந்த கூறுகளை பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்களாம்.

முறைமை: பாடசாலை.

நோக்கம்    : கல்வி அறிவுள்ள மானவ சமுதாயம்.

உள்ளீடு    : மானவர்.ஆசிரியர்,அதிபர் மற்றும் ஏனைய நிதி பௌதீக வளங்கள்.

செயற்பாடு : கற்றல் மற்றும் கற்பித்தல்.

வெளியீடு : கல்வியறிவுள்ள மானவர் சமுதாயம்.

எந்தவொரு முறைமையும் அவைகளுக்கென்று எல்லை வரையறுக்கப்பட்டே தொழிற்படுகின்றது.

உ-ம்: பாடசாலை முறைமையின் எல்லையினை இவ்வரைபடம் காட்டுகின்றது.

garde 11 tamil mediums unite 2

முறைமை    : பூங்கா.

நோக்கம்       : பொழுதுபோக்கு.

உள்ளீடு          : பூக்கள், செடிகள், கொடிகள்.

செயற்பாடு  : அவைகளுக்கு நீருற்றி பராமரித்தல்.

வெளியீடு      : பொழுதுபோக்காக அமைத்தல்.

முறைமை : மருந்தகசாலை.

நோக்கம்    : மருந்துகளை சிற்றல்.

உள்ளீடு      : மருந்துகள் நிதி பௌதிக வளங்கள்.

செயற்பாடு: மருந்துகளை வாங்கல், விற்றல்.

வெளியீடு    : நோயில்லாத சமூகத்தை உருவாக்கல்.

தகவல் முறைமை Information Systems (IS)

ஒன்றோடொன்று பின்னிப் பினைந்த கூறுகளானது ஒரு குறித்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக தரவு,

தகவல்களை சேகரித்தல், அவற்றை சேமித்தல், செயன்முறைப்படுத்தல் அவற்றை வெளியீடு செய்தல் போன்ற செயற்பாடுகளை செய்வதற்காகவுள்ள ஒரு முறைமையாகும்.

ஒரு தகவல் முறைமையானது பிரதான 3 கூறுகளைக்கொன்டது. இது பின்வரும் படம் மூலம் சித்தரிக்கப்படுகின்றது.

Input - Process – Output

உள்ளீடு (Input)

இது ஒரு தகவல் முறைமைக்கான உள்ளீடைச் சேகரித்து வழங்குகின்ற செயற்பாட்டைக் குறிக்கும். இதன் போது தரவானது கையால் மற்றும் தன்னியக்க முறை மூலம் செயற்பாட்டுக்காக உள்வழங்கப்படும்.

உதாரணம் : கடையொன்றில் Barcode Reader, மூலமாக தரவுகளை வழங்கும் முறை “தன்னியக்க முறை” ஆகும்.

அதே தரவானது காசாரால் எழுதப்பட்டால் / Type செய்யப்பட்பால் கைமுறையாகும்.

செயன்முறை (Process)

இது உள்வழங்கப்பட்ட தரவுகளை கணித்தல், ஒப்பீடு செயதல் என்பவைகளினூடாக பயன்மிகு வெளியீடாக மாற்றுதலை இப்பகுதி குறிக்கும்.

செயன்முறைப்படுத்தலானது, கணனியின் உதவியுடன்/கைமுறையால் செயல்முறைப்படுத்தப்படலாம்.

வெளியீடு (Output)

வெளியீடானது செயன்முறை நடவடிக்கையின் பிரதிபலனாக வித்தியாசமான பிரயோசனமிக்க ஆவணங்களை வெளியாக்குவதனை இது குறிக்கும்.

வெளியீடானது பல்வேறு கருவிகளின் மூலமும் பலவேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்படும்.

Eg: Display Screen, Printer, கையால் எழுதப்பட்ட ஆவணங்கள், அறிக்கைகள்.

பொதுவாக தகவல் முறைமையானது பின்வரும் அடிப்படைகளில் இடம்பெறக்கூடியதாக இருக்கும்.

1. கணனியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமை (Computer Based IS)

2. கையால் செயன்முறைப்படுத்தும் தகவல் முறைமை (Manual IS)

கணனி அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமை 
(Computer Based Information Systems)

வன்பொருள், மென்பொருள், தரவுத்தளம்(Database), தொலைத்தொடர்பாடல், மக்கள் மற்றும் செயன்முறைகள் என்பன. ஒழுங்கமைக்கப்பட்டு அதனூடாக தரவுகளை சேகரித்தல், கனித்தல், சேமித்தல், செயன்முறைப்படுத்தல் என்பவைகளினுடாக தகவலாக மாற்றுவதே (CBIS) ஆகும்.

ஒரு CBIS ஆனது பொதுவாக பின்வரும் பகுதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.

  •  வன்பொருள்
  • மென்பொருள்
  • தரவுத்தளம்
  • தொலைத்தொடர்பாடல்,வலையமைப்பு மற்றும் இனையம்.
  • மக்கள்
  • செயன்முறைகள்

கணனியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமை உதாரணங்கள்

1. காரியாலய தன்னியக்க முறைமை ( Office Automation Systems )

ஒரு காரியாலயத்தின் அடிப்படை நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக கணனிகள் அது சார்ந்த கருவிகள் மற்றும் மென்பொருட்களைப் பாவித்து காரியாலய தகவல்களை எண்ணியலாக உருவாக்கல் [Digital]. சேகரித்தல், சேமித்தல் மற்றும் செயன்முறைப்படுத்தலே காரியாலய தன்னியக்க முறைமை எனப்படும்.

ஒரு காரியாலய தன்னியக்க முறைமையினால் ஆற்றப்படும் செயற்பாடுகள்:

  • காரியாலய ஆவணங்களை தயார் செய்ய மற்றும் அவ் ஆவணங்கள், போக்குக்கள், ஒலி ஒளி வடிவான ஆவணங்களையும் சேகரித்து சேமித்தல்.
  • தகவலை பாவனையாளர்/பயனாளரிடையே பரிமாறுதல். இதற்காக மின்னஞ்சல் வசதி, Video Conference. தொடரறா சம்பாசனைக்கு(Online Conference) வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
  • நிறுவனத்தின் நிதி சார் விடயங்களை பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் ஊழியர் சம்மந்தப்பட்ட விடயங்களை பதிவு செய்து முகாமை செய்தல்.

Eg: MS Office Application, Audio, video, Photo Editing Software's

2. பரிமாற்று செயல்முறை முறைமை (Transaction Processing system)

பரிமாற்று செயல் முறையில் வணிகச் செயற்பாடுகளின் போது நாளாந்தம் ஒரு வணிகத்தில் ஒரு பகுதியாக இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு முறைப்படுத்தி செயன்முறை படுத்துவதே இந்த முறைமையாகும். பொதுவாக நாளாந்த வியாபாரச் செயற்பாடுகளாக கொள்வனவு, விற்பனை, எடுப்பு, வைப்பு போன்றவற்றைக் கூறலாம்.

ஒரு பரிமாற்று செயல்முறை முறைமை ஆனது ஒரு கணனி சார் IS என்ன பாகங்களை உள்ளடக்கியுள்ளதோ அந்தப் பாகங்களின் உதவியுடன் செயற்படக் கூடியதாகவிருக்கும்.
பரிமாற்று செயன்முறைப்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொன்டு பரிமாற்று முறைமையானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது,

1. தொகுதிவாரியான செயன்முறைப்படுத்தல் (Batch Processing)
ii, தொடரநாரா செயன்முறைப்படுத்தல் (Online Processing)

1. தொகுதிவாரியான செயன்முறைப்படுத்தல் (Batch Processing)

இந்த செயன்முறையின் கீழ் செயன்முறைப்படுத்த வேண்டிய பரிமாற்றங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் சேகரிக்கப்பட்டு பின்னர் அவை எல்லாம் ஓர் குறித்த நேரத்தில் செயல்படுத்தப்பட்டு வெளியீடு பெற்றுக்கொள்ளப்படும்.

Eg: ஊழியர்களது மேலதிக வேலை நேர அட்டவணையானது மாத இறுதியிலேயே செயன்முறைப்படுத்தப்படு சம்பளம் கணிக்கப்படும், துளை அட்டை (Punch Card), பரீட்ச்சை விடைத்தாள்கள் மதிப்பீடு.

II. தொடரறாரா செயன்முறைப்படுத்தல் (Online Processing)

இதன்போது செயன்முறையானது பரிமாற்றம் நடந்தவுடன் அதற்கான பதிவேற்றமும் எவ்வித தாமதமுமின்றி உடன் நிகழ்வதைக் குறிக்கும். இங்கு ஒவ்வொரு பரிமாற்றமும் உடனுக்குடன் செயன்முறைச் படுத்தப்படும்.

Eg: இணையத்தில் செய்யப்படும் நிகழ்நேரப் பரீட்ச்சை இணையத்தினுடாக விமானப் பயனச்சீட்டு பதிவு செய்யும் நடவடிக்கை.

3. முகாமைத்துவ தகவல் முறைமை (Management Information Systems)

MIS ஆனது முழு வியாபாரச் செயற்பாடுகளுள் உப்பிரிவாகக் கொள்ளப்படுகின்றது. இது வணிகச் செயற்பாட்டின் மக்கள், ஆவணங்கள், தொழிநுட்பம், செயன்முறைகள் என்பவைகளைப் பரிசீலித்து எழுகின்ற வியாபாரப் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்ப்பற்கும் அச்செயற்பாட்டை ஒழுங்காக கட்டுப்படுத்துவதற்கான தகவல் முறைமை இதுவாகும்.

நிறுவனத்தின் நிதி நிலமை, உற்பத்தி மற்றும் சேவைகளின் செலவுகளைக் கணித்தல் எனபவற்றை இவற்றுக்கான உதாரணம் ஆக கொள்ளலாம்.

4. நிபுனத்துவ முறைமை (Exertive Systems)

இது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு விடயத்திற்கு தீர்வுகாண விளைகின்ற போது ஒன்றுக்கு மேற்பட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் அதற்கு தீர்வினை எட்டுவதற்கு ஒப்ப இந்த முறைமையானது பிரச்சினைக்கு தீர்வினைத் தரும். இந்த முறைமையானது ஒரு மென்பொருளாகும்.

பொதுவாக செயற்கை நுண்னறிவு. அறிவு சார் முறைமை களுடன் தொடர்புடையதாகவிருக்கும்.

Eg: Chess Software

5. திரமான ஒத்துழைப்பு முறைமை (Decision Support Systems)
இது கணனியை அடிப்படையாகக்கொண்ட தகவல் முறைமையாகும். வியாபாரச் பிரச்சினைகள் எழுகின்ற போது சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு உதவி செய்யும் முறைமையாகும்.

இம் முறைமையானது வசேடத்துவமிக்க தரவுத்தளம், தீர்மானம் எடுக்கும் நுண்னறிவு, உள்ளரிவு போன்றவற்றின் மூலம் ஒரு தீர்மானத்தினை எடுக்க முடியும். 

கையால் செயன்முறைப்படுத்தப்படும் தகவல் முறைமை (MIS)

கணனியைப் பயன்படுத்தாது  தரவுகளை தகவலாக மாற்றுவதற்கான கணித்தல், சேமித்தல், செயன்முறைப்படுத்தல் நடவடிக்கைகளை பாரம்பரிய முறைகளான கை, போனா ஆவணங்கள் என்பவைகளினை பயனபடுத்துவதினை இது குறிக்கும்.

உதாரணம் - பாடசாலையில் மாணவர் அனுமதி பெறும் கைமுறைத் தகவல்முறைமையை நோக்குவோம்.

பிள்ளையைப் பாடசாலைக்கு அனுமதித்ததும் அந்தப் பிள்ளைக்குரிய சேர்விலக்கம் வழங்கப்படும். அவரது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கோவையொன்றும் தயாரிக்கப்படும். பாடசாலைக் காலத்தில் அவர் பெற்ற அடைவுகள், வெற்றிகள் போன்றன இந்த சுயவிவரக் கோவையில் பதியப்படும். 

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில்மாணவரொருவரின் கடந்தகால அடைவுகள் பற்றிய தகவல்கள் அதிபருக்குத் தேவைப்படுகிறது எனக் கொள்வோம். அதன் உள்ளீடு, முறைவழியாக்கம், வருவிளைவு ஆகியன பின்வருமாறு அமைந்திருக்கும்.

உள்ளீடு

பிள்ளையின் பெயர், உரிய வருடம்

முறைவழியாக்கம்

1. பிள்ளைக்குரிய சேர்விலக்கத்தை வழங்குதல்

2. அந்த சேர்விலக்கத்துக்குரிய கோவைகளை இனங்காணல்

3. அந்தக் கோவைகளில் உரிய வருடங்களின் பெறுபேறுகள் பற்றிய விவரங்களைப் பெறல்

4. அந்த தகவல்களின் துணையுடன் அறிக்கை தயாரித்தல்

வருவிளைவு 

உரிய வருடத்துக்கான பிள்ளையின் அறிக்கை

கேள்வி: கணனியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமைக்கும் கையால் செயன்முறைப்படுத்தப்படும் தகவல் முறைமைக்குமிடையிலான வேறுபாடு யாது?

Click to Read - முறைமை விருத்திச் செயலொழுங்கு GRADE 11 UNITE 2.2


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu